தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ரெடி ரெடி' தமன்னாவின் அசத்தல் கவர்ச்சி நடனம் - tamanna

தேவி-2 படத்தில் இடம்பெற்றுள்ள 'ரெடி ரெடி' வீடியோ பாடலில் நடிகை தமன்னா கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இந்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது.

tamanna

By

Published : May 7, 2019, 10:07 AM IST

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா, ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் நடிப்பில் உருவான 'தேவி' 2016 ஆம் ஆண்டு வெளியானது. திகில் கலந்த நகைச்சுவை படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.எல். விஜய் தேவி-2 படத்தை இயக்கியுள்ளார். இரண்டாம் பாகத்தில் பிரபு தேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா, யோகி பாபு, ஆர்.ஜே. பாலாஜி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிலிம்ஸ், ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான தேவி-2 படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்நிலையில், தேவி -2 படத்தில் இடம்பெற்றுள்ள 'ரெடி ரெடி' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் நடிகை தமன்னா இதுவரை இல்லாத அளவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட் டல்லடித்துவிட்டது என்பதை அறிந்துகொண்ட தமன்னா தாராள மனசுடன் ஏகபோகமாக கவர்ச்சி காட்டியுள்ளார். தற்போது இந்த ஹாட்டான பாடல் ரசிகர்களின் மத்தியில் வைரலாகிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details