தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நான் புடிக்கல... நிலை தடுமாறி கீழே விழுந்த தமன்னா! - தமன்னாவின் படங்கள்

தலைகீழாக பயிற்சியாளரின் உதவியுடன் நிற்கும் தமன்னா அப்போது எடுத்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tamannah
Tamannah

By

Published : May 24, 2020, 10:00 AM IST

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம்வருபவர் தமன்னா. இவர் நடிப்பில் 'ஆக்ஷன்', 'பெட்ரோமாக்ஸ்' என்ற இரு படங்கள் கடைசியாக வெளியானது.

தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் தமன்னா, அவ்வப்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் தலைகீழாக நிற்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், பயிற்சியாளர் துணையுடன் எந்த விதமான பிடிப்புமின்றி தலையை கீழே வைத்து காலை மேலே தூக்கி உயர்த்துகிறார் தமன்னா. சிறிது நேரம் தலைகீழாக நிற்கிறார். பயிற்சியாளர் அவரிடம் இருந்து சிறிது தூரம் மாறி நிற்கவே தமன்னா கீழே விழுகிறார்.

இதுகுறித்து தமன்னா, வீழ்ச்சி, தோல்வியினால் மனம் துவண்டுவிட வேண்டாம். உங்களுக்கு கிடைக்க வேண்டிய வெற்றி பல தோல்விகளுக்கு பின்னரே கிடைக்கும். பலமுறை முயற்சி செய்தும், விழுந்த பின்னரே என்னால் தலைகீழாக நிற்க முடிந்தது. ஆனால் தயவு செய்து யாரும் இதனை பயிற்சியாளர் இல்லாமல் தனியாக செய்யவேண்டாம் என கூறினார்.

இதையும் படிங்க: ஊரடங்கால் தவித்த மக்களுக்கு உதவிய தமன்னா

ABOUT THE AUTHOR

...view details