தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Run Lola Run: ஜெர்மன் த்ரில்லரில் டாப்சி - தாஹிர் - லூப் லபீடா

ஜெர்மன் கல்ட் கிளாசிக்கான ‘ரன் லோலா ரன்’ (Run lola run) படத்தை தழுவி உருவாகவுள்ள பாலிவுட் திரைப்படத்தில் டாப்சியும் தாஹிரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

Taapsee, Tahir to star in Hindi adaption of Run Lola Run
Taapsee, Tahir to star in Hindi adaption of Run Lola Run

By

Published : Feb 18, 2020, 12:39 PM IST

1998ஆம் ஆண்டு ஜெர்மானிய இயக்குநர் டாம் டைக்வேர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ரன் லோலா ரன்’. பிராங்கா பொடன்டி, மொரிட்ஸ் ப்ளெயிப்ட்ரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்தப் படத்தை தழுவி ‘லூப் லபீடா’ ( Looop Lapeta) எனும் பாலிவுட் திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை ஆகாஷ் பாட்டியா இயக்குகிறார். இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க டாப்சி, தாஹிர் ராஜ் பாசின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Taapsee, Tahir to star in Hindi adaption of Run Lola Run

ஏற்கனவே 3 படங்களுக்கு மேல் கைகளில் வைத்திருக்கும் டாப்சி, இந்தப் படத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை தனது ட்விட்டர் அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர், நல்ல கதைகள் என்றால் பேராசை, இதோ மற்றுமோர் நல்ல கதை, சோனி பிக்சர்ஸ் இந்தியா மற்றும் எலிப்சிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் ‘லூப் லபீடா’ எனும் காமெடி த்ரில்லர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திரைப்படம் 2021 ஜனவரி 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாப்சியின் திரைப்பயணத்தில் ‘லூப் லபீடா’ முக்கியமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:தொழிலதிபர்கள் அத்துமீறிய விவகாரம் - அமலாபால் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

ABOUT THE AUTHOR

...view details