தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

டாப்சியின் வயதான அசத்தல் லுக்! - bollywood movie

டாப்சி பாலிவுட்டில் 'சான்ட் கி ஆங்க்' என்னும் படத்தில் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் டீசர் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

taapsee

By

Published : Jul 18, 2019, 3:11 PM IST

தமிழில் முதன்முதலாக 'ஆடுகளம்' படத்தில் ஐரின் கதாபாத்திரத்தில் இளைஞர்களை கவர்ந்தவர் டாப்சி. அதன் பிறகு 'ஆரம்பம்', 'வந்தான் வென்றான்' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். பிறகு, இந்தி படத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தவர், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார்.

அவர் நடித்த 'பிங்க்' திரைப்படம் பாலிவுட்டில் பெரும் வெற்றியை பெற்றது. அதன் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை' என்னும் தலைப்பில் ஆகஸ்ட் 8ஆம் தேதி அப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்தி படமான 'சான்ட் கி ஆங்க்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அப்படத்தில் வயதான தோற்றத்தில் துப்பாக்கிச் சுடுவதில் கில்லாடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் டாப்சி. இதையடுத்து, பலரும் தற்போது டிரெண்டாகியுள்ள வயதான தோற்றம் கொண்ட செயலிகளில் தற்போது இருக்கும் இளமையான புகைப்படங்களை பதிவேற்றி வயதான தோற்ற புகைப்படத்தை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து டாப்சி அவரது வலைதள பக்கத்தில் 'சான்ட் கி ஆங்க்' படத்தில் வரும் அவரது வயதான புகைப்படத்தை பதிவிட்டு இது செயலி மூலம் எடிட் செய்தவை அல்ல படத்தில் தான் நடித்துவரும் உண்மையான கதாபாத்திரம் என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details