தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தமிழ்நாட்டில் பாஜக எப்படி மலரும்? டி. ராஜேந்தர் - அதிமுகவை விமர்சித்த டி ராஜேந்தர்

தமிழ்நாட்டில் பாஜக எப்படி மலரும் என டி.ராஜேந்தர் கேள்வியெழுப்பியுள்ளார்.

டி. ராஜேந்தர்
டி. ராஜேந்தர்

By

Published : Feb 3, 2022, 7:52 PM IST

அண்ணா நினைவு தினத்தையொட்டி சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் லட்சிய திமுக தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர், அண்ணா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “இப்போது மட்டுமல்ல, எப்போதும் அறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட திமுக, அதிமுகதான் தமிழ்நாட்டை ஆளும். லட்சிய திமுக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.

தற்போது கட்சியின் கட்டமைப்பு சரியாக இல்லாததால் கட்டமைப்பை வலுப்படுத்திக் கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகிறோம். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஈழத் தமிழர்கள் வாழ முடியாமல் தவிக்கின்றனர். உணவுக்கு, குடிநீருக்கு கூட பிரச்னையாக உள்ளது.

பிரதமர் மோடி, ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும். தற்போது தமிழ்நாடு பாஜகவில் உள்ள தலைவர்கள் தொடர்ந்து அந்த கட்சியில் நீடித்தால், தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது. எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை, எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் வியூகம் இல்லாமல் அழித்துவிட்டனர்.

ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் உடன் கைகோர்த்ததால், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது இன்னமும் கோபம் குறையவில்லை” என்றார்.

தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலுக்காக கரோனா போய்விட்டதா?” என்றார். மேலும், ஈழத்தமிழர்களுக்காக தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் டி.ராஜேந்தர் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'எஃப்.ஐ.ஆர்' ட்ரெய்லர் வெளியீடு; மேடையில் கண்கலங்கிய விஷ்ணு விஷால்!

ABOUT THE AUTHOR

...view details