தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

250 ரசிகர்களுக்குத் தலா ரூ.5000 தந்த சூர்யா - suriya movies

சென்னை: கரோனா ஊரடங்கால் தவித்துவரும் ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா சத்தமின்றி உதவி செய்துள்ளார்.

சூர்யா
சூர்யா

By

Published : Jun 10, 2021, 7:30 AM IST

கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இதனால் வறுமையில் வாடுபவர்களுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் உதவி செய்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் சூர்யா சத்தமின்றி வருமானமின்றித் தவிக்கும் தனது ரசிகர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வருகிறார்.

அதன்படி நேற்று(ஜுன்.09) மட்டும் 250 ரசிகர்களின் வங்கிக் கணக்கில் 5000 ரூபாயை நடிகர் சூர்யா செலுத்தியுள்ளார். கடினமான நெருக்கடி சூழலில் சூர்யா தங்களுக்கு உதவியது மிகவும் உதவிகரமாக இருந்தது என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:சிம்புவின் 'மாநாடு' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details