தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் என்ஜிகே. எடுத்த கதைகளை மீண்டும் எடுக்காமல் தனது ஒவ்வொரு படத்திலும் தான் யார் என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பவர் செல்வராகவன். நடிகர்களின் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்புகளை தாண்டி தனக்கான ஒரு தனித்துவத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
செல்வராகவனின் 'என்ஜிகே' மே மாதம் ரிலீஸ் - RELEASE
செல்வராகவன் இயக்கத்தில் மாறுபட்ட வேடத்தில் சூர்யா நடித்திருக்கும் 'என்ஜிகே' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள என்ஜிகே படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காதலர் தினத்தன்று வெளியான என்ஜிகே படத்தின் டீசர் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாய் அமைந்தது. அரசியல்வாதியாக வரும் சூர்யாவின் நடிப்பு பிரமிக்கும் வகையில் இருந்தது.
படத்தின் பணிகள் நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. என்ஜிகே திரைப்படம் மே 31 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவித்துள்ளார்.