தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘எதற்கும் துணிந்தவன்’- செகண்ட் லுக் போஸ்டர் - பிறந்தநாள் வாழ்த்துகள் சூர்யா

நடிகர் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் செகண்ட் லுக் (இரண்டாம் பார்வை) போஸ்டரை கண்ட ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

எதற்கும் துணிந்தவன்
எதற்கும் துணிந்தவன்

By

Published : Jul 23, 2021, 9:31 AM IST

Updated : Jul 23, 2021, 10:34 AM IST

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 40ஆவது படத்தில் நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் போஸ்டரை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், சூர்யா பிறந்தநாளையெட்டி ‘எதற்கும் துணிந்தவன்’ என்னும் பெயரில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

இந்நிலையில் அடுத்ததாக இன்று (ஜூலை 23) செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. ரத்தம் சொட்ட சொட்ட கையில் கத்தியுடன் மாஸாக இருக்கும் சூர்யாவின் போஸ்டரைக் கண்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

எதற்கும் துணிந்தவன்

மேலும், தனது 46ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நடிகர் சூர்யாவிற்கு, இயக்குநர் பாண்டிராஜ், சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியோர் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாண்டியராஜ் வாழ்த்து

இதையும் படிங்க: Exclusive Interview: 'பா.ரஞ்சித் ஆக்டிங் கிளாஸ் போக சொன்னாரு' - கலையரசன்

Last Updated : Jul 23, 2021, 10:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details