தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரபல ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யா? - இயக்குநர் கே வி ஆனந்துடன் இணையும் சூர்யா

பிரபல திரைப்பட இயக்குநரின் மாஸ் ஹிட் அடித்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Suriya to reunite with director K V Anand for ayan prequel
Suriya to reunite with director K V Anand for ayan prequel

By

Published : May 19, 2020, 7:41 PM IST

கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக இருந்த சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் ஊரடங்கு காரணத்தினால் வெளியாகாமல் இருந்தது. கடந்த ஆண்டு 'காப்பான்', 'என் ஜி கே' ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூர்யாவின் நடிப்பில் வெளியாகின.

இந்நிலையில், சூர்யா, இயக்குநர் ஹரியுடன் தனது அடுத்தப் படத்துக்காக கமிட் ஆகியிருக்கிறார் என தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. தற்போது தனது வெற்றி இயக்குநரான கே.வி. ஆனந்துடன் சூர்யா மீண்டும் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் அவ்வப்போது கசிந்துவருகின்றன.

'அயன்'

இதையும் படிங்க... வாடிவாசல் பட அப்டேட்: காளை மீது ரிவஞ்ச் எடுக்கும் சூர்யா?

ஏற்கனவே சூர்யா - கே.வி. ஆனந்த் கூட்டணி 'அயன்', 'மாற்றான்', 'காப்பான்' போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு திரைவிருந்து கொடுத்தன. இந்நிலையில் கே.வி. ஆனந்துடன் சூர்யா இணைந்து பணியாற்றுவார் என்கிற செய்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இந்தப் படம் 2009இல் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த 'அயன்' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும், சூர்யாவும் பிரபுவும் எப்படி கடத்தல் குழுவாக இணைந்தார்கள் என்ற கதையை மையப்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details