சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சூரரைப் போற்று'. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சென்சார் போர்டு யூ சான்றிதழ் கொடுத்துள்ளது. இப்படத்தின் அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.
சூர்யா பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! - Kollywood news
'சூரரைப் போற்று' படத்தில் இடம்பெற்றுள்ள ‘காட்டுப் பயலே’ பாடலின் ஒரு நிமிட வீடியோ சூர்யா பிறந்தநாளன்று வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகிவுள்ளது.
சூரரைப்போற்று
இந்நிலையில் அறிவித்தபடி ‘சூரரைப் போற்று’ படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 23ஆம் தேதி, அதாவது சூர்யாவின் பிறந்தநாளன்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘காட்டுப் பயலே’ என்ற பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.