பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சூரி, இளவரசு உள்ளிட்டோர் குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் படம் சூர்யா 40. கரோனா சூழல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சூர்யா 40 படப்பிடிப்பு, தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
suriya 40: ரத்னவேலு வெளியிட்ட மிரட்டலான புகைப்படம் - சூர்யா 40 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது
சூர்யா 40 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அதிலிருந்து மிரட்டலான புகைப்படம் ஒன்றை ஒளிப்பதிவாளர் ரத்னவேலு வெளியிட்டுள்ளார்.
சூர்யா 40 சில உண்மை சம்பவங்களை தழுவிய திரில்லர் கதை என கூறப்படுகிறது. இந்நிலையில், இதன் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஒரு மிரட்டலான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு திரும்பிவிட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு கேமராவைத் தொடுவது உணர்ச்சிகரமாக இருக்கிறது. இதுதான் எனக்கான இடம்; சினிமா.. சூர்யா 40 தொடங்கிவிட்டது என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:சூர்யா 40: காரைக்குடி கேன்சல்; சென்னையில் படப்பிடிப்பு!
TAGGED:
suriya 40