தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Jai Bhim: ராஜாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு ரூ.15 லட்சம் வழங்கிய சூர்யா - suriya

ஜெய் பீம் திரைப்படத்தின் உண்மை கதாபாத்திரமான ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு, நடிகர் சூர்யா 15 லட்சம் ரூபாய் வைப்பு நிதிக்கான காசோலையை வழங்கினார்.

சூர்யா, suriya
சூர்யா

By

Published : Nov 17, 2021, 7:00 AM IST

Updated : Nov 17, 2021, 6:53 PM IST

த.செ.ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சூர்யா (Suriya) நடித்துள்ள படம் 'ஜெய் பீம்' (Jai Bhim). தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இம்மாதம் 2ஆம் தேதி வெளியான இப்படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது குறித்தும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்தும் ஜெய் பீம் திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin), கமல் ஹாசன், இயக்குநர் பா. இரஞ்சித், தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்ட பலர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

சமீபத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடிகர் சூர்யாவிடம் உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாளுக்கு உதவும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற சூர்யா, அவருக்கு 10 லட்சம் ரூபாய் வங்கி வைப்புநிதியாக வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா நேற்று (நவ.16) ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளை நேரில் அழைத்து, ரூ.15 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். சூர்யா சார்பாக ரூ.10 லட்சமும், 2டி நிறுவனம் சார்பாக ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'ஜெய்பீம்' படக்குழுவினருடன் எப்போதும் நான்.. இயக்குநர் அமீர்

Last Updated : Nov 17, 2021, 6:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details