தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’சிம்புவிற்கு ’மாநாடு’ படம் மைல்கல்லாக அமையும்’ - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி - simbu latest movie

சென்னை: சிம்புவிற்கு ’மாநாடு’ படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

சிம்பு
சிம்பு

By

Published : Apr 11, 2021, 7:12 PM IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் திரைப்ப படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

நீண்ட நாள்களாகக் கிடைப்பில் போடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுவருவதால், ரசிகர்கள் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படத்தின் டீசர் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. அடிக்கடி படத்தின் படப்பிடிப்பு போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ‘மாநாடு’ படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் பார்த்தவரைக்கும் மாநாடு படம் சிம்புவுக்கும், வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல்கல்லாக அமையும். இருவருக்கும், உடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்

ABOUT THE AUTHOR

...view details