நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில்,
”தாதாசாகேப் பால்கே’ மற்றும் ‘பத்ம விபூஷண்’ விருதுகளை வழங்கி கௌரவித்த மாபெரும் இந்திய நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துக்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா...ஓரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் தான்... love u so much” எனத் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகர் மம்மூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பு ரஜினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் ஆரோக்கியமாகவும், நலமுடனும் வாழ வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித்,அருண்ராஜா காமராஜ்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினிகாந்த் சார். உங்களுடன் ஒரு பாடலாசிரியராகவும், பாடகராகவும் பணிபுரிவேன் என்று நான் என் கனவிலும் நினைத்ததில்லை. இவ்வளவு பெரிய கனவை என் வாழ்க்கைகயில் கண்டதில்லை. என்னைப் பெரிதாகக் கனவு காணச் செய்ததற்கு நன்றி.
மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
உலகமே ஒருமித்து இரசிக்கும் ஓர் மனிதன்.. இவரின் உயரத்திற்கு பொறாமைகொள்ளாமல் பொருத்தமானவர் என அங்கீகரிக்கும் வரம் பெற்றவர்..நான் வேறு ஒன்றும் வேண்டுவதில்லை. "ஆரோக்கியமுடன் தமிழ்த் திரையுலகை நிரந்தரமாய் அலங்கரித்து நீடித்து வாழ்க"... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி
”இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே..அன்றில் இருந்து அண்ணாத்த படம் வரை நீங்கள் திரையில் தோன்றி எங்களை சந்தோஷப்படித்தியுள்ளீர்கள். இதற்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை தலைவரே.. உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் எப்போதும் பிரார்த்தனை செய்கிறேன். love u ரஜினிகாந்த் சார்.”
இதையும் படிங்க : கார் பந்தயத்தில் களமிறங்கிய ஜெய்!