ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘தர்பார்’. இதில் பிரதிக் பப்பார், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
’ஐ எம் ஏ பேட் காப்’ - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’தர்பார்’ ட்ரெய்லர்! - தர்பார் வெளியாகும் தேதி
ரஜினி நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தர்பார்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாக உள்ளது.இந்நிலையில், ‘தர்பார்’ படத்தின் ட்ரெய்லர், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதியன்று வெளியாகும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அன்று வெளியாகவில்லை. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் '#DarbarTrailer' என்ற ஹேஷ்டாக் உடன் சமூகவலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.