இது பற்றி சன்னி லியோன்தெரிவித்ததாவது:
பாலிவுட்டில் 2012ஆம் ஆண்டு 'ஜிஸம் 2' படத்தின் மூலம் அறிமுகமானேன். 'ராகினி', 'எம்எம்ஸ் 2', 'ஏக் பஹேலி லீலா', 'குச் குச் லோசா ஹை', 'மஸ்திஸாதா' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன்.
இது மட்டுமல்லாது தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்திருக்கிறேன். தற்போது 'கோக-கோலா' என்ற ஹாரர் காமெடி திரைப்படத்தில் நடித்து வருகிறேன்.
நான் பாலிவுட்டுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் சிலர் எனது கடந்த காலத்தை பற்றி பேசி வருகின்றனர். அதைப்பற்றி நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை.
எனக்கான நட்பு வட்டம் மிகவும் குறுகியது. அவர்களுடன் நான் இருக்கும் நேரம் மிகவும் அற்புதமானது. அது ஆசீர்வதிக்கப்பட நேரமாக இருக்கும். நட்சத்திர விடுதிகளில் நடக்கும் கேளிக்கை விருந்துகளில் அதிக அளவில் கலந்து கொள்ள மாட்டேன்.
2011இல் எனது நீண்ட நாள் காதலர் டேனியல் வெப்பரை திருமணம் செய்துகொண்டேன். 2017இல் நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டோம். வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் உள்ளன.
குடும்ப வாழ்க்கையையும், திரையுலக வாழ்க்கையையும் ஒருங்கிணைத்து செயல்படுவது மிகவும் கடினமாக உள்ளது. ஆனாலும், அதைச் சமாளித்து வருகிறேன். குழந்தைகளைக் கவனிப்பதே இந்த உலகின் மிகச் சிறந்த செயலாகும். எனது வாழ்க்கையில் தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியான தருணத்தில் உள்ளேன்.
17 வருடங்களாக பொழுதுபோக்குத் துறையில் இருந்து வருகிறேன். இதில் எனக்கு பெரியளவில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதும் புரிந்துகொண்ட படைப்பாளிகள் என்று யாரும் கிடையாது. எனவே, பிற திரைப்படங்கள் குறித்து எப்போதும் விமர்சிக்க மாட்டேன். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என எப்போதும் விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் தனது வாழ்க்கை, சினிமா, பொழுதுபோக்கு பற்றி சன்னி லியோன் மனம் திறந்து பேசினார்.