தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’தி பேமிலி மேன் 2 ஒளிபரப்பை உடனே நிறுத்துக’

'தி பேமிலி மேன் 2’ தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா
பாரதிராஜா

By

Published : Jun 7, 2021, 1:29 PM IST

‘தி பேமிலி மேன் 2’ வெப்தொடர் சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இதில், ஈழத் தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் பலரும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்துவருகின்றனர்.

அந்தவகையில் ‘தி பேமிலி மேன் 2’ தொடரைத் தடை செய்யவேண்டும் எனக் கூறி இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எங்கள் இனத்திற்கு எதிரான ‘தி பேமிலி மேன் 2’ இணையத் தொடரை நிறுத்தத் தமிழர்களும், தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்தபிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

தி பேமிலி மேன் 2 தொடர்

வரலாற்றைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு:

தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன. அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட வேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லீம், வங்காளி எனக் குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.

ஒளிபரப்பை நிறுத்த வேண்டும்:

தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளைப் புறக்கணித்துத் தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்துவிதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதைத் தவிர்க்கவோ, தடுக்கவோ இயலாது என்பதைக் கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details