ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-கேட் கேப்ஷாவின் மகள் டெஸ்ட்ரி அலைன். இவர் ஸ்பீல்பெர்க்-கேப்ஷாவின் ஏழு குழந்தைகளில் ஒருவர். இவர் ஹாலிவுட்டில் கதாநாயகியாகவும் எழுத்தாளராகவும் வலம்வருகிறார்.
காதலருடன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஸ்பீல்பெர்க்கின் மகள் - ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் மகள் டெஸ்ட்ரி அலைன் தனது காதலனான நடிகர் ஜென்க் லெக்ராண்டுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.
அலைன் ஹாலிவுட்டில் தனி இடத்தைப் பெற வேண்டும் என்பதற்குத் தனது குடும்பப் பெயரையோ, தனது தந்தையின் பெயரையோ பயன்படுத்தவில்லை. இதனையடுத்து டெஸ்ட்ரி அலைன் தனது காதலனான நடிகர் ஜென்க் லெக்ராண்டுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.
இதுகுறித்து டெஸ்ட்ரி அலைன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் சிறந்த நண்பருடன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இதுவே என் வாழ்நாளில் மிகச்சிறந்த நாள். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் ஜென்க் லெக்ராண்டு” எனப் பதிவிட்டிருந்தார்.