தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சித்தியும், மகனும் ஹோலி கொண்டாடியுள்ளனர்'- பிரியங்காவை பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள்! - nick jones

நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜான்ஸை நெட்டிசன்கள் பகிரங்கமாக கலாய்த்துள்ளனர்.

பிரியங்காவை பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள்
பிரியங்காவை பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள்

By

Published : Mar 14, 2020, 1:49 PM IST

நடிகர் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலக பயணத்தை தொடங்கியவர் பிரியங்கா சோப்ரா. இதையடுத்து பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடிக்கிறார்.

இதற்கிடையில் தன்னை விட 10 வயது குறைந்தவரான அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அடிக்கடி தனது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு வருகிறார். அப்புகைப்படங்களை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

பிரியங்காவை பகிரங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள்.

இந்நிலையில் சமீபத்தில் பிரியங்கா தனது கணவருடன் சேர்ந்து ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதை கண்ட நெட்டிசன்கள், 'சித்தியும், மகனும் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளனர்' என்று பகிரங்கமாக கலாய்த்தனர். தொடர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வந்தாலும் அவற்றை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸ் தம்பதி கண்டுகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'நான் யாரையும் ஏமாற்றும் நோக்குடன் பழகவில்லை' - கடந்த காலம் குறித்து பேசிய தீபிகா

ABOUT THE AUTHOR

...view details