மார்வெல் தயாரிப்பில் உருவான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' வெளியாகி பத்து நாள்கள்தான் ஆகிறது, அதற்குள் 'ஸ்பைடர்-மேன் ஃப்ரம் ஹோம்' படத்தின் ட்ரைலரை மார்வல் வெளியிட்டு அதகளப்படுத்தியுள்ளது. நடிகர் டாம் ஹாலண்ட் 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்தை பார்க்காமல் படத்தின் ட்ரைலரை பார்க்க வேண்டாம் என்ற அலர்ட்டுடன் படத்தின் ட்ரைலர் ஆரம்பமாகிறது. எனவே அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் மிகப்பெரிய சீக்ரெட்டை ஸ்பைடர் மேன் ஃப்ரம் ஹோம் ஓபன் செய்துள்ளதால் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.
இந்த உலகத்தை காக்க அடுத்த அயர்ன்மேன் தேவை - மிரட்டும் டாம் ஹாலண்ட் - ஸ்பைடர்-மேன் ஃப்ரம் ஹொம்
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை பார்க்காதவங்க கண்டிப்பா 'ஸ்பைடர்-மேன் ஃப்ரம் ஹோம்' படத்தின் ட்ரைலரை பார்க்காதீங்க.
நடிகர் டாம் ஹாலண்ட் தனது நண்பர்களுடன் ஐரோப்பாவிற்கு டூர் செல்கிறார். அப்போது ஸ்பைடர் மேன் உதவியை நிக் ஃபுயிரி நாடுகிறார். வேறொரு உலகத்தில் இருந்து வந்திருக்கும் மைஸ்டிரியோ இந்த உலகத்தில் நடக்கும் ஆபத்தை தடுக்க ஸ்பைடர் மேனிடம் வேண்டுகோள் விடுக்கிறார். அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் அயர்ன் மேன் இறந்து விட்டதால் அயர்ன் மேன் இல்லாத இடத்தில் ஸ்பைடர் மேன் உலகத்தை காக்க படும் கஷ்டத்தை காட்சிகள் விவரிக்கிறது. மேலும், அயர்ன் மேன் இல்லாததால் இந்த உலகத்திற்கு இன்னொரு அயர்மேன் தேவை என்பதை டாம் ஹாலண்ட் சொல்லும் காட்சிகள் பிரமாதம். 2.59 நிமிடம் கொண்ட இப்படத்தின் டிரெய்லர் பார்ப்பவரை பிரமிக்க வைக்கிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள இத்திரைப்படம் ஜூலை -2ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி வசூல் சாதனை படைக்கவுள்ளது.