தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஸ்பைடர்மேன்' அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியீடு!

'ஸ்பைடர்மேன்' மூன்றாம் பாகத்துக்கான அதிகாரப்பூர்வ தலைப்பை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Spider-Man
Spider-Man

By

Published : Feb 25, 2021, 9:21 PM IST

உலக காமிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்று ஸ்பைடர்-மேன். இந்தக் கதாபாத்திரத்தை முன்வைத்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. மார்வெல் ஸ்டூடியோ 2019ஆம் ஆண்டு 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' என்ற படத்தை வெளியிட்டது. இந்த படம் பெரும் ஹிட் அடிக்கவே இதன் அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இதற்கிடையில், சோனி - மார்வெல் நிறுவனங்களுக்கிடையே காப்புரிமை தொடர்பான பிரச்சனை ஏற்பட்டு இரண்டு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், தற்போது ஸ்பைடர்மேன் பட வரிசையில் அடுத்த பாகத்தை இரண்டு தரப்பும் சேர்ந்தே தயாரிக்கின்றன.

இப்படத்தில், கடந்த ஸ்பைடர்மேன் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிடோர்கள் நடிக்கின்றனர். இப்படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், ஆகியோர் தங்களது சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர். இதில் மூன்று பேரும் மூன்று தலைப்புகளை படத்துக்கு வழங்கியதால் பெரும் குழப்பம் அடைந்தனர்.

இந்நிலையில், புதிய ஸ்பைடர்மேன் படத்திற்கான அதிகாரப்பூர்வத் தலைப்பை மார்வெல் நிறுவனம் தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி ஸ்பைடர்மேன் மூன்றாம் பாகத்துக்கு 'ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்' என்று தலைப்பிட்டுள்ளது. மேலும் இந்த படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக, டிசம்பர் 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:இந்த உலகத்தை காக்க அடுத்த 'அயர்ன்மேன்' தேவை - மிரட்டும் டாம் ஹாலண்ட்

ABOUT THE AUTHOR

...view details