தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எஸ்.பி.பி மறைவு- தாமரைப்பாக்கத்தில் நடைபெற்ற பத்தாம் நாள் சடங்கு! - S. P. Balasubrahmanyam songs

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பத்தாம் நாள் சடங்கு இன்று(அக்.04) தாமரைப்பாக்கத்தில் நடைபெற்றது.

எஸ்.பி.பி
எஸ்.பி.பி

By

Published : Oct 4, 2020, 12:21 PM IST

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த எஸ்.பி.பி கடந்த மாதம் 25ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் பால் ஊற்றும் நிகழ்வு மற்றும் பத்தாம் நாள் நிகழ்வு, திதி என தொடர்ந்து மூன்று நாள்கள் சடங்கு சாங்கியங்கள் நடைபெறுகிறது. அதன்படி நேற்று(அக்.03) பால் ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து இன்று(அக்.04) பத்தாம் நாள் அனுஷ்டிக்கப்பட்டு சம்பிரதாய சடங்குகள், சாங்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. மிக முக்கிய நிகழ்வாக கருதப்படும் இதில் எஸ்.பி.பியின் இறுதி சடங்கிற்கு வராதவர்கள் மற்றும் உறவினர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதனையடுத்து நாளை (அக்.05) மற்றும் நாளை மறுநாள்(அக்.06) ஆகிய இரண்டு நாள்கள் எஸ்.பி.பிக்கு நடக்கும் சடங்கு நிகழ்வு, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details