தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கொரோனா குமார் ஆகிறாரா சிம்பு? - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா குமார்
கொரோனா குமார்

By

Published : Jul 27, 2021, 7:30 PM IST

'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படங்களை இயக்கியவர் கோகுல். இவர் அடுத்ததாக 'கொரோனா குமார்' என்ற படத்தை இயக்கவுள்ளார். கரோனா குறித்து நகைச்சுவை பாணியில் தயாராகும் இந்தப் படத்தில் சந்தானம் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

படத்தின் கதையைக் கேட்டுவிட்டு, உடனே சிம்பு சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை முதலில் சினிமாவாலா பிக்சர்ஸ் சதீஷ் தயாரிப்பதாக இருந்த நிலையில் தற்போது வேல்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதையும் படிங்க:மீண்டும் வெளியாகும் விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்'

ABOUT THE AUTHOR

...view details