பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம், 'கேஜிஎஃப்'. நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருந்த இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
சுமார் ரூ.100 கோடி வசூலித்து சாதனை செய்த இப்படம் சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த வரைகலை (Vfx) ஆகிய இரண்டு பிரிவுகளில் தேசிய விருது பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'கேஜிஎஃப்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணி நடந்து முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் 'கேஜிஎஃப்' படம் ஜூலை 16ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் கரோனா ஊரடங்கு காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், இதன் வெளியிட்டு தேதி செப்டம்பர் 9ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் 'கேஜிஎஃப் 2' படம் டிசம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக 'கேஜிஎஃப் 2' ரிலீஸ் தேதி மாற்றப்படுவதால் யாஷ் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:யூ-ட்யூபில் புதிய சாதனைப் படைத்த 'கேஜிஎஃப் 2'