தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சோனு சூட் காலில் விழுந்த ரசிகர் - சோனு சூட் உதவிகள்

நடிகர் சோனு சூட் காலில் அவரது ரசிகர் ஒருவர் விழுந்து ஆனந்த கண்ணீர் வடிக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

சோனு சூட்
சோனு சூட்

By

Published : Jun 15, 2021, 1:57 PM IST

கரோனா பொது முடக்கம் காரணமாகப் பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி தவித்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர் திரும்ப, போக்குவரத்து வசதி செய்த கொடுத்து நற்பெயர் பெற்றவர், நடிகர் சோனு சூட்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, அதன்மூலம் வழங்கிவருகிறார். இவரின் இந்தச் சேவையைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சோனு சூட்டின் ரசிகர் ஒருவர் அவரை நேரில் சந்திக்கும்போது ஆனந்த கண்ணீருடன் காலில் விழுந்துள்ளார்.

மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு மிகப் பெரிய ஆசையே சோனு சூட்டை நேரில் காண வேண்டும் என்பதே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞர் காலில் விழும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இது குறித்து நடிகர் சோனு சூட் அவரது ட்விட்டர் பக்கத்தில், “என் வாழ்க்கையில் நான் எதையோ செய்திருக்கிறேன். அதனால்தான் மக்கள் தினமும் இவ்வளவு அன்பை என் மீது பொழிகிறார்கள். அவர்களின் துயரங்கள் அனைத்தும் முடிவுக்கு வர நான் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஆர்யா-விஷாலின் எனிமி டீசர் எப்போது?

ABOUT THE AUTHOR

...view details