தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளில் சினேகா - பிரசன்னா தம்பதியும் ஒன்று. இந்த ஜோடிக்கு சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது பெண் குழந்தையின் பெயரை சொல்லியிருக்கிறார் பிரசன்னா. சினேகா - பிரசன்னா ஜோடி தங்கள் பெண் குழந்தைக்கு ஆத்யாந்தா என பெயரிட்டுள்ளனர்.
மகாலட்சுமி மந்திரத்தில் இருந்து குழந்தைக்கு பெயரிட்ட சினேகா - பிரசன்னா தம்பதி - ஆத்யாந்தா
சினேகா - பிரசன்னா தம்பதி தங்கள் பெண் குழந்தைக்கு மகாலட்சுமி மந்திரத்தில் இருந்து பெயர் சூட்டியுள்ளனர்.
sneha - prasanna second child name revealed
முதல் குழந்தை பெண்ணாக பிறந்தால், ஆத்யா என பெயரிட இந்த ஜோடி திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் முதலாவதாக பையன் பிறந்ததால், அவருக்கு விஹான் என பெயர்சூட்டினர். தற்போது பெண் குழந்தைக்கு ஆத்யாந்தா என பெயரிட்டிருக்கிறார்கள். மகாலட்சுமி மந்திரத்தில் இருந்து இந்தப் பெயரை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆத்யாந்தா என்றால் தமிழில் ‘இறுதிவரை’ என அர்த்தம்.