தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாயாண்டி குடும்பத்தாரை மிஞ்சும் எஸ்கே16 பட போஸ்டர் - sk16 movie poster

'மாயாண்டி குடும்பத்தார்', 'முத்துக்கு முத்தாக' பட பாணியில் பாண்டிராஜ் இயக்கும் எஸ்கே 16 படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

எஸ்கே16 பட போஸ்டர்

By

Published : May 8, 2019, 11:46 PM IST

கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். மார்ச் மாதத்தில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களை சன் பிக்சரஸ் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, நடராஜ், சமுத்திரக்கனி, இயக்குனர் பாரதிராஜா, ஆர்கே சுரேஷ், உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் சம்பவங்களை யதார்த்தத்தோடு பதிவு செய்யும் பாண்டிராஜ் இப்படத்திலும் அதேபோன்று வேறு ஒரு கதைக்களத்துடன் களம் இறங்கியுள்ளார். எஸ்கே 16 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, இயக்குனர் பாண்டிராஜ், ஆர்.கே.சுரேஷ், இமான், நட்டி என்கிற நடராஜ், அனு இம்மானுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க இருக்கும் கேரக்டர்களை தெரியப்படுத்தும் விதமாக புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதில், குடும்பத்திற்கு மூத்தவராக பாரதிராஜா, கடா மீசையுடன் சமுத்திரக்கனி, சண்டை போட காத்திருக்கும் நட்ராஜ் இருப்பது போன்று போஸ்டர் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details