சென்னை: வைபவ் நடித்த சிக்ஸர் படத்தின் இயக்குநர் சாச்சி. இவர் ரெமோ, கத்தி போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த சதீஷின் உறவினர் ஆவார்.
சிக்ஸர் பட இயக்குநருக்கு திருமணம் - பிரபலங்கள் நேரில் வாழ்த்து! - sixer
சிக்ஸர் இயக்குநர் திருமணத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
sixer
இவருக்கு நேற்று (1.9.2021) காலை கோவிலம்பாக்கதில் உள்ள விஜயராஜா திருமண மண்டபத்தில் சென்னையை சேர்ந்த டாக்டர் சரண்யா என்பவருடன் திருமணம் நடந்தது.
இதில் சினிமா பிரபலங்கள் நடிகர் சிவகார்த்திகேயன், சதீஷ், மிர்ச்சி சிவா, இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் P.G முத்தையா, அஜய் (நடன இயக்குனர்), நிப்பு சாமி, நடிகை ரித்விகா மற்றும் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.