தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

DON FIRST LOOK கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் கலக்கல் - டான் பட அப்டேட்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

டான்
டான்

By

Published : Nov 10, 2021, 5:47 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், 'டான்'. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இதனை லைகா நிறுவனத்துடன் இணைந்து எஸ்.கே.புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது.

சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நடந்த படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் 'டான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் சிவகார்த்திகேயன் மிகவும் கூலாக போஸ் கொடுத்திருக்கிறார்.

பின்பக்கம் சிவாங்கி, சரவணன் உள்ளிட்டோர் கல்லூரி மாணவர்களாக இடம்பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கூலாக தோன்றும் சிவகார்த்திகேயனை படத்தில் காண அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டாக்டர்' திரைப்படம், 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பு நிறைவு!

ABOUT THE AUTHOR

...view details