தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'டபுள் மாஸ்க் போட்டுக்கோங்க' - ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய சிவகார்த்திகேயன் - சிவகார்த்திகேயன் படங்கள்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

sivakarthikeyan
sivakarthikeyan

By

Published : May 30, 2021, 9:22 PM IST

தமிழ்நாட்டில் கரோனா 2ஆவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக திரையுலகப் பிரபலங்களை வைத்து தமிழ்நாடு அரசு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது.

அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'என்னுடைய ரசிகர்களான தம்பி, தங்கைகள் அனைவருக்கும் வணக்கம்.

உங்களிடம் நான் தனித்தனியாகப் பேச முடியவில்லை. அதனால் தான் இந்த ஆடியோ பதிவு. நீங்கள் அனைவரும் பத்திரமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். எப்போதும் மாஸ்க் அணியுங்கள். டபுள் மாஸ்க் அணியச் சொல்லி இருக்காங்க. அதையும் கட்டாயம் அனைவரும் அணியணும். தடுப்பூசி குறித்து சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் கேட்டு போட்டுக்கோங்க. நானும் தடுப்பூசி போட்டுட்டேன்.

உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால், அவர்களை ரொம்ப முக்கியமாக பார்த்துக்கணும். தேவை இருந்தால் மட்டும் டக்குனு வெளியே போயிட்டு வாங்க. எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருங்க. விரைவில், என் படம் மூலம் அனைவரையும் நான் சந்திக்கிறேன். என் மீது அக்கறை செலுத்திய அனைவருக்கும் பெரிய நன்றி' எனப் பேசியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details