தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

லாக்டவுனை பயனுள்ள வகையில் செலவிடும் சிவகார்த்திகேயன் - சிவகார்த்திகேயன் படங்கள்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது வீட்டில் உள்ள காய்கறித் தோட்டம் வைத்துள்ளது குறித்த காணொலியை வெளியிட்டுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

By

Published : Jun 13, 2021, 7:10 AM IST

கரோனா ஊரடங்கு நேரத்தில் பிரபல நடிகர், நடிகைகள் அனைவரும் படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால், வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றனர். பலரும் இந்த நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவு செய்ய மொட்டை மாடியில் தோட்டம் உருவாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் தனது வீட்டில் காய்கறித் தோட்டம் ஒன்றை அமைத்துள்ளார். இதுகுறித்த வீடியோவை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், 'இங்கு அனைத்து விதமாகக் காய்கறி, கீரை வகைகள் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு இன்னும் நிறையப் பயிரிட வேண்டும் என்பதே எனக்கு ஆசை.

அதற்கு இன்னும் சில நாள்கள் தேவைப்படும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். நமது வாழ்க்கையும் கூடிய விரைவில் இந்த காய்கறி தோட்டம் போல் பசுமையாக மாறும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அரசியலில் நுழைகிறாரா நடிகர் ஷாருக் கான் ? - பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details