தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#Hero செம ஸ்மார்ட்டான சிவகார்த்திகேயன்!  - வைரல் புகைப்படம் - ஹீரோ திரைப்படம்

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் 'ஹீரோ' படத்தில் சிவகார்த்திகேயன் நியூ லுக் ஹேர்-ஸ்டைல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

sivakarthikeyan

By

Published : Sep 21, 2019, 9:35 AM IST

இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் திரைப்படம் 'ஹீரோ'. இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் அர்ஜுன், ரோபோ சங்கர், பாலிவுட் நடிகர் அபய் தியோல், இவானா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹீரோ படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரேவற்பைப் பெற்றது. சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட இப்படம் குழந்தைகள் ரசிக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'ஹீரோ' திரைப்படம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் பயங்கர குஷியடைந்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே பாண்டிராஜ் இயக்கத்தில் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் நடித்துமுடித்தார். இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஹீரோவில் சிவகார்த்திகேயன் புதிய லுக்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. ஹீரோ படப்பிடிப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் 'எதிர்நீச்சலடிக்கும் சிவா' என்று தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details