பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்த இரும்புத்திரை படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலில் சாதனை புரிந்தது. இப்படத்தில் இடம்பெற்ற ஆதார் கார்டு பற்றிய சர்ச்சைகள் பெரிய அளவில் படத்திற்கு ஓபனிங்காக இருந்தது. இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததை விட ஸ்மார்ட் போனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் பேசிய படமாக இருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மித்ரன் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என்ற படத்தை இயக்கினார்.
சிவகார்த்திகேயன் தெறிக்க விடும் 'ஹீரோ' படத்தின் அதிரடியான அப்டேட் - ரிலீஸ் தேதி அறிவிப்பு
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பயங்கர உற்சாகமடைந்துள்ளனர்.
இப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், அபேய் தியோல், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படத்தின் பூஜைகள் தொடங்கப்பட்டு படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் அப்டேட் செய்தி சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஹீரோ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தொடர் தோல்வி படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் இப்படத்தின் வெற்றிக்காக பயங்கர எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். மேலும், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 16 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என, படக்குழு தெரிவித்துள்ளது. குடும்பத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.