பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். அவரின் மறைவு குறித்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
’கண்ணீருடன் விடை தருகிறோம்’- எஸ்.பி.பி. மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்! - பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
சென்னை: எஸ்.பி.பி. மறைவு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் ’கண்ணீருடன் விடை தருகிறோம்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் எஸ்.பி.பி. மறைவு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது. உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள்” என்று பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
இதையும் படிங்க:'எஸ்பிபி மறைவை ஏற்க முடியவில்லை' - இசையமைப்பாளர் தீனா!