'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சன் இயக்கும் அடுத்த படம் டாக்டர். இதில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
'டாக்டர்' படம் குறித்து சிவகார்த்திகேயன் முக்கிய அறிவிப்பு! - டாக்டர் பட அப்டேட்
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
Sivakarthikeyan
படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டதாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர் நெல்சன், படக்குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.