தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘யார் காலையோ பிடித்து முதல்வரான பழனிசாமிக்கு அருகதையில்லை’ - கொதிக்கும் சிவாஜி பேரவை! - சிவாஜி சமூகநலப் பேரவை

சென்னை: கட்சி ஆரம்பிக்கும் நடிகருக்கு சிவாஜி நிலைதான் ஏற்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததற்கு, சிவாஜி சமூகநலப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிவாஜி சமூகநலப் பேரவையின் அறிக்கை

By

Published : Nov 12, 2019, 7:40 PM IST

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களுக்கு சிவாஜி நிலைதான் ஏற்படும் என கிண்டலடித்ததற்கு சிவாஜி சமூகநலப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களுக்கு சிவாஜி நிலைதான் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிண்டலடித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில், ‘காங்கிரஸ் - அதிமுக கூட்டணி இருந்தபோது, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வெற்றிபெற வைத்தவர் சிவாஜி என்பதை தமிழக முதல்வருக்கு யாராவது எடுத்துச் சென்னால் நல்லது. சிவாஜி பற்றி குறை கூறுவதற்கு, யார் காலையோ பிடித்து முதல்வர் பதவியில் அமர்ந்த இவருக்கு அருகதை இல்லை. நடிகர் திலகத்தால் அரசியலில் பதவி பெற்றவர்கள் ஏராளம். சிவாஜி பற்றிய வரலாறு தெரியாமல், தேவையில்லாமல் அவரைப் பற்றி பேசுவதை இனியாவது தமிழக முதல்வர் தவிர்க்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

சிவாஜி சமூகநலப் பேரவையின் அறிக்கை

இதையும் படிங்க:#HBDSivajiGanesan - 'இன்பச் சக்கரம் சுற்றுதடா, அதில் நான் சக்கரவர்த்தியடா'!

ABOUT THE AUTHOR

...view details