தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

1,500 பேருக்கு உணவு நல்கிய பாடகர் வேல்முருகன்! - பாடகர் வேல்முருகன்

சென்னை: அன்னையர் தினத்தை முன்னிட்டு திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் 1,500 பேருக்கு உணவு வழங்கியுள்ளார்.

1,500 பேருக்கு உணவு வழங்கிய பாடகர் வேல்முருகன்
1,500 பேருக்கு உணவு வழங்கிய பாடகர் வேல்முருகன்

By

Published : May 10, 2020, 8:54 PM IST

சர்வதேச அன்னையர் தினம் இன்று(மே10ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலரும் தங்களது தாய்க்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். ஒரு சிலரோ ஏழை, எளிய மக்களுக்கு உணவு கொடுக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ்த்திரையுலகில் பின்னணிப் பாடகராகப் பணியாற்றி வரும் வேல்முருகன், அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள 1,500 பேருக்கு உணவு வழங்கியுள்ளார்.

1,500 பேருக்கு உணவு வழங்கிய பாடகர் வேல்முருகன்

இவருடன் இணைந்து இணைசெயலாளர் பிரகாஷ், உயர் நீதிமன்றச் செயலாளர் மோகன், கூடுதல் செயலாளர் நாகப்பன் ஆகியோரும் உணவு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, 'அம்மா என்று சொல்லி பாருங்க. அந்த வார்த்தை கூட தெய்வமாகுங்க. கடவுளிடம் கேட்டுப்பாருங்க. தாயின் கருவறையே கோயில் தானங்க' என்ற பாடலையும் வெளியிட்டுள்ளார், வேல்முருகன்.

இதையும் படிங்க:'தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்' - கரோனா கவிதை வெளியிட்ட வைரமுத்து!

ABOUT THE AUTHOR

...view details