திரைப்பட டப்பிங் யூனியன் தேர்தல் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்களிக்கச் சென்ற பாடகி சின்மயிக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, யூனியனில் உறுப்பினராவதற்கு, தான் ரூ.15 ஆயிரம் செலுத்தியும், தன்னை யூனியன் உறுப்பினர் இல்லை என்று மறுப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒரே கட்சியில் உள்ள காரணத்தால், எதிரணியில் உள்ள எஸ்.வீ. சேகரை, ராதா ரவி சந்திப்பதாகவும், இவர்களை எதிர்த்து கேள்வி எழுப்புகிறவர்களை சங்கத்தை விட்டு நீக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக கூறிய பாடகி சின்மயி, ராதாரவி காலில் விழுந்தோ அல்லது அவரது வீட்டுக்கு சென்றோ மன்னிப்பு கேட்க முடியாது என்றார்.
'ராதாரவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க முடியாது' - பாடகி சின்மயி - singer chinmayi to file case against Radharavi dubbing union election
திரைப்பட டப்பிங் யூனியன் தேர்தலில் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், இப்பிரச்னையை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாகவும், ராதாரவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க முடியாது எனவும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
singer chinmayi to file case against Radharavi dubbing union election