தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நம்ம சிம்புவா இது... புதிய புகைப்படத்தைப் பார்த்து வியக்கும் ரசிகர்கள்...! - suseenthiran directs simbu

சென்னை: இயக்குநர் சுசீந்திரன் படத்தில் நடித்து வரும் சிலம்பரசன், 20 கிலோ வரை தனது எடையைக் குறைத்து வெளியிட்டுள்ள புகைப்படம், ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

simbu-transformation-for-suseenthiran-directorial
simbu-transformation-for-suseenthiran-directorial

By

Published : Oct 25, 2020, 8:16 PM IST

Updated : Oct 25, 2020, 8:49 PM IST

லாக் டவுன் காலத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய குறும்படத்தில் நடித்த சிம்பு, தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தத் திரைப்படத்திற்கு நடிகர் சிம்பு, 20 கிலோ வரை எடையை குறைத்தாக தகவல்கள் வெளியானது.

இதனிடையே சில நாள்களுக்கு முன்னதாக Atman என்ற அடைமொழியுடன் சிம்பு குறித்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது. அதேபோல் சமூகவலைதளங்களில் இருந்து விலகியிருந்த சிம்பு, மீண்டும் சமூகவலைதளங்களில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை சிம்பு எடையைக் குறைந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதில் சிம்பு பார்ப்பதற்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வருவது போல் மிகவும் இளமையாக உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் #STR46 என்று சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நாளை இப்படத்தின் முதல் பார்வை வெளியாகவுள்ளது.

மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த மாநாடு திரைப்படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விக்ரம் பிரபுவிற்கு ஒளியாகிய வாணி போஜன்

Last Updated : Oct 25, 2020, 8:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details