தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கௌதம் மேனன் - சிம்பு படத்திற்கு சிக்கல்! - நதிகளிலே நீராடும் சூரியன்

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள புதிய படம் கிடப்பில் போடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

simbu
simbu

By

Published : May 5, 2021, 3:31 PM IST

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. இதில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, இதர மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக புதியப்படத்தில் இணைகிறது. இந்த படத்தை வேல்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது. 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்று பெயரிடப்பட்ட இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தை ஆரம்பிக்காமல் கிடப்பில் போடுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கௌதம் மேனம் தற்போது உச்சகட்ட பண நெருக்கடியில் இருப்பதாகவும் அதன் காரணமாக படம் கிடப்பில் போடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு புறம் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ பட ஷூட்டின்போது,’ வெற்றிமாறனை கதாநாயகனாக வைத்து ஒரு கதையை கெளதம் மேனன் தயார் செய்து அதை வெற்றிமாறனிடம் கூறவே அவரும் ஓ.கே கூறியதாகவும் அந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கெளதம் மேனன் அடிக்கடி பணம் கேட்டதால் வேல்ஸ் குரூப் இந்த படத் திட்டத்தை ட்ராப் செய்துவிட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஆனால் ரஹ்மானுக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்துவிட்டதால் திட்டமிட்டபடி படவேலைகள் சீக்கிரம் தொடங்கும் என்றும் ஒரு தரப்பு சொல்லி வருகிறார்கள்.

ABOUT THE AUTHOR

...view details