தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஈஸ்வரன்' பட டப்பிங் பணியை முடித்த சிம்பு! - சிம்பு புது படங்கள்

'ஈஸ்வரன்' படத்தில் தான் நடித்துள்ள காட்சிகளின் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக நடிகர் சிம்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிம்பு
சிம்பு

By

Published : Nov 8, 2020, 5:00 PM IST

நடிகர் சிம்புவின் 46வது திரைப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

திண்டுக்கல்லில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் தெரிவித்தது. இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்த கையோடு சிம்பு தனது டப்பிங் பணிகளையும் விரைவாக முடித்து கொடுத்துள்ளார். இதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

படத்தின் டீசர் வரும் தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு பிறகு சிம்பு நடித்துள்ள இப்படத்தை காண அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இதையும் படிங்க:மகனின் பிறந்தநாளை கோவாவில் கொண்டாடிய கே.ஜி.எஃப் ஸ்டார்!

ABOUT THE AUTHOR

...view details