தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 26, 2021, 9:54 PM IST

ETV Bharat / sitara

யூ-டியூப் தளத்தில் சாதனை படைக்கும் சிம்பு பட பாடல்

சென்னை: ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்றுள்ள ’மாங்கல்யம் தந்துனானே’ பாடல் யூ-டியூப் தளத்தில் சாதனை படைத்து வருகிறது.

ஈஸ்வரன் பட பாடல்
ஈஸ்வரன் பட பாடல்

நடிகர் சிம்பு நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இயக்குநர் பாரதிராஜா உடன் நடித்த இப்படத்தில் இசையமைப்பாளராக தமன் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மாங்கல்யம் தந்துனானே' பாடல் யூ-டியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்நிலையில் பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் சிம்பு ட்வீட் செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details