தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓடிடியிலும் லேட் என்ட்ரி கொடுக்கும் சிம்பு - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ’ஈஸ்வரன்’ திரைப்படம் தாமதமாகவே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சிம்பு
சிம்பு

By

Published : Jun 11, 2021, 10:11 AM IST

நடிகர் சிம்பு நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியான திரைப்படம், ‘ஈஸ்வரன்’ . நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ’ஈஸ்வரன்’ திரைப்படம் நாளை(ஜுன்.12) டிஸ்னி+ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக ’ஈஸ்வரன்’ திரைப்படத்துடன் மோதிய ’மாஸ்டர்’ படம், வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது.

ஓடிடியிலும் லேட் என்ட்ரி கொடுக்கும் சிம்பு

சிம்பு தான் ஷூட்டிங்கிற்கு தாமதமாகச் செல்கிறார் என்றால், அவரின் படமும் தாமதமாகவே ஓடிடியில் வெளியாகிறது என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ஒரேநேரத்தில் 5 படங்களில் சிவகார்த்திகேயன்..... சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details