சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' 2006ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' என்ற பெயரில் உருவாக்குவதற்கு இயக்குநர் சங்கர், சிம்புதேவன் திட்டமிட்டனர்.
இப்படத்திற்காக நடிகர் வடிவேலு நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, முதற்கட்ட படப்படிப்பிற்காக சென்னையில் அரண்மனை செட் அமைத்து படப்படிப்பு நடத்தப்பட்டுவந்தது. படப்பிடிப்பின்போது இயக்குநர் சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட வடிவேலு இப்படத்திலிருந்து அதிரடியாக விலகினார்.