சென்னை: நடிகர் சிம்பு வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக அனைத்து மொழி படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நடிகர்கள் வீட்டிற்குள் மூடங்கியுள்ளனர்.
இந்நிலையில், லாக் டவுன் காரணமாக, தாங்கள் என்ன செய்கிறோம் என்பது குறித்து அடிக்கடி நடிகர், நடிகைகள் சிலர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் நடிகர் சிம்பு என்ன செய்கிறார் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேட்டு வந்தனர். இதையடுத்து அவர், தான் என்ன செய்கிறேன் என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
லாக்டவுனில் சிம்பு, வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார். வீட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு சிம்பு ஓடும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சிம்புவின் வெறித்தனமான ஒர்க் அவுட்டை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
சிம்பு நடிப்பில் தற்போது உருவாகிவரும் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்றுவந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:’அஜித், விஜய்.... இதை செய்தால் பிளாக் செய்யப்படும்’- விவேக்