தமிழ் சினிமா உலகில் தனக்கென்று நிலையான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் சிம்பு. இவரைப் பற்றி அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளும், செய்திகளும் வருவது வழக்கம். அந்த வகையில், அவரது திருமணம் குறித்த பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவிவந்தது.
திருமணம் குறித்து எவ்வித திட்டமும் தற்போது இல்லை - சிம்பு - marrigeஞ
திருமணம் குறித்து எவ்வித திட்டமும் தற்போது இல்லை என்றும் இது குறித்த அறிப்பை உரிய நேரத்தில் வெளியிடவுள்ளதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், "தன்னுடையை சினிமா வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவை குறித்து பல்வேறு வதந்திகள் தொடர்ந்து பகிரப்பட்டுவருவது வெளிப்படையானது. திருமணம் குறித்து எவ்வித திட்டமும் தற்போது இல்லை. அது குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் நானே வெளியிடுவேன். பல்வேறு காரணங்களாக தயாரிப்பாளர்களை நான் சந்திப்பது உண்டு. அதையெல்லாம் வைத்து நான் அவர்களுடன் இணைவேன் என்று கூறுவது தவறு" என்றார்.
மேலும், தனக்கு உறுதுணையாக உள்ள தனது ரசிகர்கள், ஊடகத்தினர் ஆகியோருக்கு நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.