தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காதலுக்கு குட் பை சொன்ன ஸ்ருதிஹாசன் - shruti haasan

சென்னை: லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கோர்சாலும் நடிகை ஸ்ருதிஹாசனும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இந்தச் சம்பவம் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஸ்ருதிஹாசன்

By

Published : Apr 27, 2019, 8:52 AM IST

Updated : Apr 27, 2019, 11:43 AM IST

நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் கடந்த சில மாதங்களாக லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கோர்சால் என்பவரை காதலித்து வந்தார். இதனால் நடிகை ஸ்ருதிஹாசன் படங்களை நடிப்பதை தவிர்த்து பல்வேறு நாடுகளில் மேடைகளில் பாடல்களை மட்டுமே பாடிவந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள நடிகர் கமல்ஹாசனும் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென்று இவர்களின் காதல் பிரேக் அப் ஆகி முடிவிற்கு வந்துள்ளது.

இது தொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்,"ஒரு புதிய ஆரம்பம். காதல் அனுபவங்களுக்கு நன்றி. இனிமேல் சினிமா, இசை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன். இருப்பினும் இது ஒரு சிறந்த காதல்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த மைக்கேலின் புகைப்படங்களையும் அவர் நீக்கியுள்ளார்.

Last Updated : Apr 27, 2019, 11:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details