தமிழில் 'அஞ்சான்', 'துப்பாக்கி' ஆகிய படங்களில் நடித்து இருந்தவர் வித்யுத் ஜம்வால். இவருடன் நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து இருக்கும் படம் 'யாரா' (yaara).
டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ஸ்ருதி ஹாசன் திரைப்படம் - ஸ்ருதிஹாசனின் திரைப்படங்கள்
நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் 'யாரா' (yaara) திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தைத் தயாரிப்பாளர் டிக்மான்ஷு துலியா இயக்கி தயாரித்துள்ளார். இத்திரைப்படம் பிரெஞ்சில் வெளியான 'எ கேங் ஸ்டோரி' திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
வித்யுத் ஜம்வால் - ஸ்ருதிஹாசனுடன் அமித் சாத், விஜய் வர்மா, கென்னி பாசுமாதரி, சஞ்சய் மிஸ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வட இந்தியாவின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் இப்படம் நான்கு குற்றவாளிகளுக்கிடையில் நீடித்த நட்பை பற்றியதாகும்.
நட்பை எடுத்துரைக்கும் இப்படம் ZEE5 ஸ்ட்ரீமிங் தளத்தில் ஜூலை 30ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.