தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஸ்ருதி ஹாசன் பாடியுள்ள ‘எட்ஜ்’ பாடல் வெளியீடு! - Music album

நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ள ‘எட்ஜ்’ பாடல் யூ டியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்

By

Published : Aug 8, 2020, 4:37 PM IST

நடிகை ஸ்ருதி ஹாசன் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பாடல்கள் பாடுவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தனக்குள் இருக்கும் இசை ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ‘எட்ஜ்’ என்ற புதிய பாடலை அவர் இன்று வெளியிட்டுள்ளார். அடுத்த வருடம் தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் ஒரு பாடல்தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதி ஹாசன்

இதுகுறித்து அவர் கூறுகையில், "இசை என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். அதைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ’எட்ஜ்’ உங்களுக்கு இருக்கும் குழப்பத்தைத் தீர்த்து, உங்கள் அன்பான பகுதிகளை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியாக இருக்கும்.

மற்றவர்களிடம் நீங்கள் சிறந்ததை எதிர்பார்த்து நிற்கும்போது, உங்களை உண்மையாகப் புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்வதற்கான பயணம் தொடங்குகிறது. அதை வெளிப்படுத்தும் வகையில் எட்ஜ் பாடல் அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன்

கரண் பாரிக் இணைந்து தயாரித்துள்ள ‘எட்ஜ்’ பாடலில் ஸ்ருதி ஹாசன் பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுள்ளார். பாடலை எழுதி, பாடியது மட்டுமின்றி, பாடலைப் பதிவு செய்து, இயக்குநரும், எடிட்டருமான சித்தி படேலுடன் இணைந்து இப்பாடலுக்கான வீடியோவையும் அவர் இந்த ஊரடங்கு காலத்தில் படமாக்கியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details