‘ஆடை’ படத்தின் வெற்றிக்கு பிறகு 'ஆடுஜீவிதம்' என்ற மலையாளப் படத்தில் நடித்துவருகிறார் அமலா பால். சமீபத்தில் கேரளாவில் உள்ள ஆலப்புழா 'போட் ஹவுஸில்' தங்கிய அவர், வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதை எடுத்தவர் தன் அன்புக்குரியவர் எனும்படியான Shot by #Love என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். சில வருடங்களுக்கு முன், இயக்குநர் விஜயுடன் திருமண பந்தத்தை முறித்துக்கொண்ட நடிகை அமலா பால், தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருப்பதுபோல் ட்விட்டரில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிலேஷன்சிப்பில் மாட்டிக்கொண்ட அமலா பால் வெளியிட்ட வீடியோ! - amala paul latest stills
நடிகை அமலா பால் புதிய வீடியோ ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு Shot by #Love எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை அமலாபால், "அறுவடை நேரம் நெருங்கும்போது, சூரியனின் கண்கள் தானியங்களை பக்குவமடையச் செய்த வேளையில் களத்துக்குள் செல்லுங்கள் அன்புக்குரியவரே" என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். நடிகை அமலாபாலின் செல்லக்காதலன் மற்றொரு நடிகரா அல்லது தயாரிப்பாளரா என தெரிந்துகொள்ள அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
"ஆடை" படத்துக்குப் பிறகு அமலா பால் மீண்டும் சோலோ பெர்ஃபார்மன்ஸ் செய்துள்ள "அதோ அந்த பறவை போல" படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், நடிகை அமலா பால் மீண்டும் ரிலேஷன்ஷிப்பில் மூழ்கியிருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.